புதர் மண்டிய பூங்கா மாநகராட்சி, 14வது வார்டு, முருகன் நகர் பகுதியில் மாநகராட்சி பூங்கா கடந்த 10 ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்கா முழுவதும் முட்புதர் முளைத்துள்ளது. இதில், பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ உயிரினங்கள் இருக்கின்றன. விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளது. - கோகுல்: வளைவில் இருக்கு ஆபத்து மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனி, தக்சா அபார்ட்மென்ட் செல்லும் வழியில், சாலை திருப்பத்தில் மின்கம்பம் உள்ளது. வாகனங்கள் திரும்பும்போது கம்பத்தில் மோதுவதற்கு வாய்ப்புள்ளது. மின் கம்பத்தை உடனே இடமாற்ற வேண்டும். - உமாசங்கர்: சாலையில் ஓடும் சாக்கடை காந்திபுரம், ஐந்தாவது வீதி, லாலா ஓட்டல் எதிரில் கடந்த ஒரு மாதமாக, பாதாள சாக்கடை நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. சாலையில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாக்கடை நீரால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. - சுரேஷ்: வடிகால் வசதியில்லை சரவணம்பட்டி, எல்.ஜி.பி., நகர், இரண்டாவது மெயின் வீதி, மூன்றாவது கிராசில், முறையான தார் சாலை மற்றும் வடிகால் வசதியில்லை. மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. நடந்து செல்லவும், வாகனங்களை ஓட்டவும் சிரமமாக உள்ளது. - தனசேகரன்: சுத்தம் செய்யாத சாக்கடை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், செல்வ விநாயகர் கோவில் வீதி, காந்திநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்வதில்லை. கால்வாயில் குப்பை அடைத்து, கழிவுநீர் நிரம்பி வழிகிறது. கால்வாயை சுற்றிலும் அடர் புதர் வளர்ந்துள்ளது. - கீர்த்தி: கால்வாய் கட்டணும் கணபதி, 19வது வார்டு, அத்திப்பாளையம் ரோடு, வெங்கடசாமி நகர் அருகே ஏ.எஸ்.கே., கார்டனில் சாக்கடை வசதியில்லாமல் சிரமப்படுகிறோம். சாலையோரம் திறந்தவெளியில் செல்லும் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. கால்வாயை சுத்தம் செய்த பின்பு சாலையோரம் குவிக்கப்படும் கழிவை உடனே அகற்றாததால், வாகனஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். - ராமசுப்பிரமணியன்: சகதியான ரோடு சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி, குழாய் பதித்த பின் சாலையை சரிசெய்யவில்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், சேற்று வயல் போல சாலை மாறிவிடுகிறது. வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சேற்றில் மாட்டிக்கொள்கிறது. - ஈஸ்வரமூர்த்தி: ஆக்கிரமிப்பால் அவதி டவுன்ஹால், கருப்பகவுண்டர் வீதியில் சாலையோரம் தொடர்ந்து கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. சாலையில் இடதுபுறம் திரும்ப முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். - பாலமுருகன்: வழுக்கி விழுகிறோம் சரவணம்பட்டி, வரதையங்கார்பாளையம், வி.ஐ.பி., நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, முறையான தார் சாலை வசதியில்லை. மழைக்காலத்தில் சிரமமாக உள்ளது. பெரிய வாகனங்கள் தடுமாறி செல்கையில், பைக்கில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர். - தாரகை: குழியான ரோடு துடியலுார், ரயில்வே கேட் முன் பல இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால், குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். பெரிய விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும். - ராஜா: