உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் வியாபாரம் :கிராமங்களில் அபாரம்

பொங்கல் வியாபாரம் :கிராமங்களில் அபாரம்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பொருட்கள் வியாபாரம் களைகட்டியது.போகிப் பண்டிகை தினமான நேற்று, வீடுகளை சுத்தம் செய்து, வீட்டின் முன் பூளைப்பூ, வேப்பிலை, மாவிலை, ஆவாரம்பூ கொண்டு காப்பு கட்டப்பட்டது.தொண்டாமுத்தூர், பேரூர் மற்றும் ஆலாந்துறையில் கடை வீதிகளில், சாலையின் இருபுறமும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.ஒரு கட்டு மாவிலை, வேப்பிலை, 10 ரூபாய்க்கும், ஒரு கட்டு, பூளைப்பூ, ஆவாரம்பூ, 20 ரூபாய்க்கும், ஒரு ஜோடி கரும்பு, 120 ரூபாய்க்கும், பச்சை மஞ்சள் ஒரு கொத்து, 50 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல, பச்சரிசி, முந்திரி, திராட்சை, பூமாலை, பானை போன்ற பொருட்களை வாங்கவும், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை