உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

விளையாட்டு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

கருமத்தம்பட்டி;கணியூரை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமார் கவுசல்யா தம்பதியின் மகன் சித்தேஷ், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், யோகா போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு கணியூர் ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதேபோல், சோமனுாரை சேர்ந்த விக்னேஷ்குமார் - சண்முக பிரியா தம்பதி மகன் ஹரி நிதீஷ். சாமளாபுரம் லிட்ரஸி மிஷன் மெட்ரிக் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில், யோகாசனங்கள் செய்து அசத்தினார். அவருக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி