உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவரை சாகுபடியில் மழையால் களைச்செடி

அவரை சாகுபடியில் மழையால் களைச்செடி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் பரவலாக அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக அவரை சாகுபடியில் களைச்செடிகள் அதிகரித்துள்ளது. பகவதிபாளையத்தை சேர்ந்த விவசாயி நஞ்சுண்டமூர்த்தி கூறியதாவது: 30 சென்ட் நிலத்தில் ஆங்கூர் வகை அவரை பயிரிட்டு, ஒன்றரை மாதங்களாகிறது. மழை காரணமாக பயிர் அருகே அதிகளவு களைச்செடிகள் முளைத்துள்ளன. இன்னும், 20 நாட்களில் காய் பறிப்பு துவங்கிவிடும். அவரை பயிரில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, வாரத்தில் ஒரு முறை மருந்து தெளிக்கப்படுகிறது. உரம், மருந்து, களை எடுப்புக்கு தற்போது வரை, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை அவரைக்காய் பறித்தால் 60 கிலோ வரை கிடைக்கும். ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை