மேலும் செய்திகள்
900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
22-Jan-2025
பாலக்காடு ;அனுமதியின்றி கேரளாவுக்கு கடத்தி வந்த, தமிழக ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் மேற்பார்வையில், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், நேற்று கருமண்ணு என்ற பகுதியில் தவ்பீக், 40, என்பவரின் ரைஸ் மில்லில் நடத்திய சோதனையில், எந்தவித ஆவணமும் இல்லாமல், 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில், 850 கிலோ தமிழக ரேஷன் அரிசி மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரைஸ் மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22-Jan-2025