உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

மேட்டுப்பாளையம்:பொது தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மாணவர்களுக்கு, நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, பொது தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வை இரண்டு பிரிவாக நடத்துகிறது. முதல் பிரிவுக்கு திங்கள், செவ்வாய், புதன், ஆகிய மூன்று நாட்களுக்கும், இரண்டாவது பிரிவுக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கும் செய்முறை தேர்வை நடத்துகிறது. அதன் அடிப்படையில் நேற்று மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், செய்முறை தேர்வுகள் நடைபெற்றன. நாளையும், நாளை மறுநாளும் முதல் பிரிவுக்கும், வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு இரண்டாம் பிரிவு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை