உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்ஜெட்டில் கலர் கலராக ரீல் ; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரீர்

பட்ஜெட்டில் கலர் கலராக ரீல் ; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரீர்

கோவை : மாநகராட்சி 'பட்ஜெட்' கூட்டம் காலை, 10:10க்கு துவங்கி 11:05 மணி வரை நடந்தது. அப்போது மேயர், வரவு - செலவு திட்டம் தொடர்பாக வாசித்தபோது, 'ஸ்பீக்கர்' சரியாக ஒலிக்காமல் அரைகுறையாக கேட்டது.ஆத்திரமடைந்த அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், ''முதலில், இங்கிருக்கும் ஸ்பீக்கர்களுக்கும் சேர்த்து, ஒரு 'பட்ஜெட்' போடுங்கள். நீங்கள் பேசுவது, 'கரகர'வென கேட்கிறது. இந்த பட்ஜெட் மக்களுக்கு பயனற்றது,'' என்றார்.குறுக்கிட்ட மேயர் கல்பனா, ''நீங்கள் கடந்த, 10 வருடம் கோவையை நாசமாக்கி விட்டீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள். நாங்கள் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்,'' என்றார்.இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ரமேஷ், ஷர்மிளா ஆகியோருடன் வெளிநடப்பு செய்த அவர், பின் நிருபர்களிடம் கூறுகையில்,''இந்த பட்ஜெட் ரூ.3,300 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கூறப்பட்ட அம்சங்களே இந்த பட்ஜெட்டிலும் இடம்பெறுள்ளது. மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட்.மக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூல் செய்கின்றனர். வெள்ளலுார் குப்பை கிடங்கால் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் நிலவும் நிலையில், தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது. 'கலர் கலராக ரீல்' விடப்பட்டுள்ளது; வெங்காய பட்ஜெட் எனலாம். எனவே, பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி