உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும்

குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும்

கோவை : சிங்காநல்லுார் ரங்காபுரத்தை சேர்ந்த சரவணன், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:ரங்காபுரத்தில், 1980 முதல் வசித்து வருகிறோம். 60 வீடுகள் இருக்கின்றன. மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு பெற்றிருக்கிறோம். 2006 வரை சொத்து வரி செலுத்தியிருக்கிறோம். அதன்பின், சொத்து வரி பெறவில்லை.எங்கள் பகுதியில் வசிக்கும், பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கவில்லை.போதுமான கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி இல்லை. போதிய வசதிகள் செய்து தருவதோடு, குடியிருக்கும் பகுதிக்கு, பட்டாவும் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை