உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது

 ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது

கோவை: காரமடையை சேர்ந்தவர் விஜயா, 51. அதே பகுதியில், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனத்தில், காரமடை அன்னவீதியை சேர்ந்த கார்த்திகேயன், 55 கணக்காளராக பணிபுரிந்து வந்தார். தினமும், பணத்தை வசூலித்து, நிறுவனத்தின் கணக்கில் வரவு வைத்து, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார். நிறுவனத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், 45, மற்றும் காரமடையை சேர்ந்த அருண்குமார், 45 ஆகியோர் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், 2021 - 2024 ம் ஆண்டு வரை மூவரும் வசூல் செய்த ரூ.1.41 கோடி பணத்தை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகுமாரை கடந்த, 6ம் தேதி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்தஅருண்குமாரை தேடி வந்தனர்.நேற்று அவரைபோலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.24 ஆயிரம் மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை