உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசியளவிலான ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் செகண்ட்

தேசியளவிலான ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் செகண்ட்

கோவை : அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ., ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், மத்தியப்பிரதேசம் போபாலில் உள்ள ஸ்ரீ பவன் பாரதி பள்ளியில் நடந்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ஐந்து மண்டலங்களை சேர்ந்த, 20 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் மாணவர் மற்றும் மாணவியர், இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினர். சிறந்த வீராங்கனையாக, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் ரிதுமகா மற்றும் சிறந்த கோல் கீப்பராக பிஜூ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி