மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
4 minutes ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
5 minutes ago
தேசிய நூலக வார விழா
6 minutes ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
6 minutes ago
கோவை: வாகாரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர், மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில மேம்பாட்டு ஆணையம் சார்பில், கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 வயதுக்குட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்ட வாகாரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆன்டனி ராஜ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள, தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் மாணவரை வாழ்த்தி பாராட்டினர். பின்னர் பேசிய அவர், “மாணவர்கள் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டால் கவனச்சிதறல் குறையும்; அது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவும்,” என்றார்.
4 minutes ago
5 minutes ago
6 minutes ago
6 minutes ago