உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நடந்த சாரி வாக்கத்தான்

பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நடந்த சாரி வாக்கத்தான்

கோவை : நீர் பாதுகாப்பு மற்றும் பெண் உரிமை பாதுகாப்புக்காக, 'சாரி வாக்கத்தான்' என்ற விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியின் மகளிர் மேம்பாட்டு பிரிவு, ஆதவா கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் திருப்பூர், உதவிடுவோம் உயிர் உள்ளவரை சார்பில், நீர்பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புடவை அணிந்து பேரணியாக செல்லும் நிகழ்வு நடந்தது. பேரணியை, புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் இயக்குனர் மரகதம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர், கல்லுாரி வளாகத்தில் துவங்கி, அவிநாசிலிங்கம் பல்கலை வரை பேரணியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை