உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ.,வுக்கு ஆதரவாக சசிதரூர் பேச்சு; காங்., மாநில தலைவர் கண்டனம்

பா.ஜ.,வுக்கு ஆதரவாக சசிதரூர் பேச்சு; காங்., மாநில தலைவர் கண்டனம்

கோவை; நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வெளிநாடு செல்லும் குழுவில் காங்., கட்சியும் இடம் பெற்றது. காங்., கட்சி தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று காங்.,கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார். தமிழ்நாடு சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதையடுத்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வெளிநாடு செல்லும் குழுவில் காங்., கட்சியும் இடம் பெற்றது. காங்., கட்சி தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கோவையில் மேலும் 5,000 எண்ணிக்கையிலான அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுகிறது. 2014 ல் மத்தியிலிருந்த காங்., அரசு ஆணவக்கொலைக்கு எதிராக தனி மசோதாவை கொண்டு வந்தது அதே ஆண்டு தேர்தலுக்கு பின்பு பொறுப்பேற்ற பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை. ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்.கோவையில் புற்றுநோய் பரிசோதனை 2,00,0000 பேருக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்துாரை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். போர் குறித்த தகவல்களை விமர்சனத்துக்குள்ளாக்காமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !