உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைபாதையில் இடையூறாக கடை வியாபாரிகளுக்கு ரூ.5,500 அபராதம்

நடைபாதையில் இடையூறாக கடை வியாபாரிகளுக்கு ரூ.5,500 அபராதம்

கோவை; மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட டவுன்ஹால், பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், பாதசாரிகள் ரோட்டில் நடக்கின்றனர். விபத்து ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதிகளில், நேற்று முன்தினம் இரவு, உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரன் தலைமையிலான பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.5,500 அபராதம்! கோவிந்த பிரபாகரன் கூறுகையில், ''மூன்று இடங்களிலும் நடைபாதை, ரோட்டை ஆக்கிரமித்திருந்த ஐந்து கடைக்காரர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற அபராத நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை