உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கோ கோ போட்டியில் டி.என்.ஜி.ஆர்., பள்ளிக்கு வெள்ளி

மாநில கோ கோ போட்டியில் டி.என்.ஜி.ஆர்., பள்ளிக்கு வெள்ளி

கோவை;தொட்டியத்தில் நடந்த மாநில அளவிலான கோ கோ போட்டியில், வரதராஜபுரம் தியாகி என்.ஜி., ராமசாமி நினைவு பள்ளி (டி.என்.ஜி.ஆர்.,) அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது. பள்ளிக்கல்வித்துறையின் 64வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான கோ கோ போட்டி, தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. மாவட்ட அளவில் நடந்த போட்டியில், முதல் இடம் பிடித்த அணிகள் பங்கேற்றன. இதன் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், கோவை மாவட்டம் சார்பில் டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி பங்கேற்றது. சிறப்பாக விளையாடிய கோவை மாணவர்கள், காலிறுதிப்போட்டியில் கன்னியாகுமரி (12 - 11) அணியையும், அரையிறுதியில் சிவகங்கை (12 - 11) அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் கோவை அணி, ஈரோடு அணியிடம் (15 - 14) ஒரு புள்ளி வித்தியாசத்தில், வெற்றியை நழுவவிட்டது. இதன்மூலம், கோவை டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை, டி.என்.ஜி.ஆர்., பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன், உடற்கல்வி துறையினர் கார்த்திகா பானு, சிவா தினேஷ் குமார் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ