உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒற்றை யானை நடமாட்டம்; எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி

 ஒற்றை யானை நடமாட்டம்; எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி

வால்பாறை: வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் வருகை அதிகரித்துள்ளது. கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில், கடந்த மாதம், 13ம் தேதி முகாமிட்ட ஒற்றை யானை ஊமையாண்டி முடக்கு காடம்பாறை டிவிஷனில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த அசலா, அவரது பேத்தி ேஹமாஸ்ரீ ஆகியோரை தாக்கியது. அதில், அவர்கள் இருவரும் இறந்தனர். இந்த சம்பவத்தில் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அதே யானை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் மீண்டும் உலா வரத்துவங்கியுள்ளது. யானை நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். தொழிலாளர்கள் கூறியதாவது: வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில், பாட்டி, பேத்தியை தாக்கி கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வேறு பகுதியில் விட வேண்டும் என, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை பிடித்து வேறு பகுதிக்கு விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் இன்று வரை யானையை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் உலா வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை