உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உடல் நலன் சிறப்பு கருத்தரங்கம்; மாணவர்களுக்கு சான்றிதழ்

 உடல் நலன் சிறப்பு கருத்தரங்கம்; மாணவர்களுக்கு சான்றிதழ்

உடுமலை : உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், உடல்நலம் குறித்த சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது.உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், ஜி.வி.ஜி., கலையரங்கில் 'நமது உடலே நமது நண்பன்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்றார்.தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிறப்புத்தலைவர் நடராஜன், தலைவர் மணி, பத்திர எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் ஜோதிலட்சுமி, செயலாளர் மணிகண்டன், தமிழசை சங்க நிர்வாகி அருண்கார்த்திக் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு, உடற்பயிற்சி, உண்ணும் உணவுகளால் உடல்நலம் மேம்படுவதும், செயல்படுவதும் குறித்து பேசினார்.பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழிசை சங்கத்தின் சார்பில் நடந்த பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியை, தமிழிசை சங்க உறுப்பினர் உமாநந்தினி, ஓய்வுபெற்ற தலைமை தபால் அலுவலர் ஜவகர் தொகுத்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ