கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நாளை துவங்குகிறது. பிரம்ம குமாரி கோதை தினகரன் தொடக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து பாரதி பாஸ்கர், 'சேக்கிழார்' என்ற தலைப்பிலும், ஜன., 2ம் தேதி விசாலாட்சி, 'காரைக்கால் அம்மையார்' பற்றியும், ஜன., 3ம் தேதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், 'ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றியும், ஜன., 4ம் தேதி வழக்கறிஞர் சுமதி, 'சதாசிவ பிரம்மேந்திரர்' பற்றியும், ஜன., 5ம் தேதி ஜெயந்தி ஐயங்கார், 'நம்மாழ்வார்' பற்றியும் சொற்பொழிவாற்றுகின்றனர். வரும் ஜன., 6ம் தேதி வாசுகி மனோகரன், 'அபிராமி பட்டர்' பற்றியும், ஜன., 7ம் தேதி புதுகை பாரதி, 'அவ்வையார்' பற்றியும், ஜன., 8ம் தேதி தேவி லட்சுமி, 'வள்ளலார்' பற்றியும், ஜன., 9ம் தேதி குரு ஞானாம்பிகா, 'ஆதிசங்கரர்' பற்றியும், நிறைவு நாளான ஜன., 10ம் தேதி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், 'நாம தேவர்' பற்றியும் உரையாற்றுகின்றனர். தொடர் சொற்பபொழிவு நிகழ்வில் பங்கேற்க அனுமதி இலவசம்.