உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

சூலூர்;கலங்கல் ரோடு லட்சுமி கார்டன் பேஸ் 2 ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம், வரும், 21 ம்தேதி நடக்கிறது.சூலூர் கலங்கல் ரோடு லட்சுமி கார்டன் பேஸ் 2 பகுதியில், ஸ்ரீ மகா கணபதி கோவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு, வரும், 20 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. முதல்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடக்கிறது. இரவு ஒயில் கும்மி ஆட்டம் நடக்கிறது. வரும், 21 ம்தேதி காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, 8:00 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி