உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ நேரு வித்யாலயா விளையாட்டு விழா

ஸ்ரீ நேரு வித்யாலயா விளையாட்டு விழா

கோவை;ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 59வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளியின் தலைவர் மஹாவீர் போத்ரா தேசியக்கொடியையும், பள்ளியின் துணைத் தலைவர் கமலேஷ் பானா பள்ளியின் கொடியையும் ஏற்றினர்.கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.பள்ளி செயலாளர் நிஷாந்த் ஜெயின், துணைச்செயலாளர் ரத்தன் சந்த் போத்ரா, முதல்வர் பங்கஜ், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை