உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்

மாநில அளவிலான கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்

கோவை:பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று துவங்கியது.ஐ.பி.ஏ.ஏ., (இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்) சார்பில், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், நேற்று துவங்கியது. இன்று முடிவடைகிறது.போட்டியை, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ், கல்லுாரி டெக்ஸ்டைல் துறை தலைவர் செந்தில் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மண்டல அளவில் நடந்த போட்டியில், முதல் இடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று நடந்த முதல் போட்டியில், சேலம் மாவட்ட அணி 42 - 8 என்ற புள்ளிக்கணக்கில் மதுரை அணியையும், வேலுார் அணி 38 - 23 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சியையும், தஞ்சாவூர் அணி 30 - 29 என்ற புள்ளிக்கணக்கில் நாகை மற்றும் புதுச்சேரி அணியையும், சென்னை அணி 20 - 0 என்ற புள்ளிக்கணக்கில் காஞ்சிபுரம் அணியையும் வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ