| ADDED : ஜன 26, 2024 12:54 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, ஒளிரும் ஸ்டிக்கர்ஒட்டும் நிகழ்ச்சி உடுமலை ரோட்டில் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி அதிகாரிகள் உரிய அறிவுரைகளை வழங்கினர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ரோட்டோரமாக செல்ல வேண்டும். பாதுகாப்பாகவும், கவனமுடன் செல்ல வேண்டும்.பனி மூட்டம் அதிகமுள்ள நேரங்கள் மற்றும் இரவு நேர பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும்.வாகன ஓட்டுனர்கள், பக்தர்களுக்கு இடையூறு செய்யாதவாறும், அதிவேகமாக செல்லாமல் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.