உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இலவச சைக்கிள் விரைந்து வழங்க மாணவ, மாணவியர் கோரிக்கை

 இலவச சைக்கிள் விரைந்து வழங்க மாணவ, மாணவியர் கோரிக்கை

கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் அனைத்து மாணவ - மாணவிகளுக்கும், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 782 பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,608 சைக்கிள்கள் முழுமையாக பொருத்தப்பட்டு, ஒருசில பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் டிசம்பரில் அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் விடுமுறைகள் வரும். விடுமுறை முடிந்த கையோடு, பிப்ரவரியில் செய்முறை தேர்வுகளும், மார்ச்சில் பொதுத்தேர்வுகளும் வந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலானால் நலத்திட்ட உதவிகள் வழங்க முடியாது. சைக்கிள் வழங்குவது சாத்தியமற்றதாகிவிடும். ஆகவே, விரைந்து வழங்க மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'சைக்கிள் பொருத்தும் பணிகள், தற்போது வரை 20 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 'டிசம்பருக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள்கள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி