உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி தினமலர் - பட்டம் வினாடி - வினாவில் அபாரம்

 திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி தினமலர் - பட்டம் வினாடி - வினாவில் அபாரம்

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, மாணவர்களுக்காக, 'தினமலர்' சார்பில் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. தி வெஸ்டர்ன் காட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி எட்டிமடையில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இதில் 'பி' அணியை சேர்ந்த நன்மதி மற்றும் பிரணிகா வெற்றிபெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் சரண்யா இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். நிர்மல மாதா கான்வென்ட் ஐ.சி. எஸ்.இ./ஐ.எஸ்.இ. பள்ளி வெள்ளலூரில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். இதில், 'பி' அணியை சேர்ந்த ஸ்டேஸி மற்றும் லிவின்சி மிலானி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் ரோஸ்லின் புல்லேலி (எஸ்.ஏ.பி.எஸ்.,) இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். நிர்மல மாதா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளலூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். 'ஏ' அணியை சேர்ந்த மதுஸ்ரீ , பவன் ரோகேஷ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் அலெக்ஸ் பிரேம் குமார், துணை செயலாளர் டென்சிபாய், முதல்வர் சிசி (எஸ்.ஏ.பி.எஸ்.,) ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் இப்போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ