| ADDED : ஜன 10, 2024 12:35 AM
கோவை:''தமிழர்களுக்கு தமிழும், சைவமும் அவர்களது இரண்டு கண்களாக இருக்க வேண்டும்,'' என்று ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பேசினார்.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கிக்கானி பள்ளியில் நடைபெற்று வரும், 'எப்போ வருவாரோ 2024' நிகழ்ச்சியில், ஆன்மிக பேச்சாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், அருளாளர் திருநாவுக்கரசர் பற்றி பேசியதாவது:தமிழர்களுக்கு தமிழும், சைவமும் அவர்களது இரண்டு கண்களாக இருக்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை. தமிழை பற்றி தெரியவில்லை என்றால், தமிழை பற்றி பேச அதிகாரம் இல்லை.வேதனை வரும்போது தான், உறவின் அருமை தெரியவரும். செல்வத்தை கண்டவுடன் அனைவரது மனமும் மாறி விடும். செல்வத்தை வரம் என்று நினைக்கிறார்கள்; செல்வம்தான் சாபம்.இளமை இருந்தால் ஆற்றல் இருக்கும்; அறிவு இருக்காது. முதுமையில் அறிவு இருக்கும்; ஆற்றல் இருக்காது. அறிவும், ஆற்றலும் சேர்ந்தால் தான் ஆள முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.