| ADDED : ஜன 25, 2024 06:42 AM
கோவை : டாக்டர் கிஷோர் டெண்டிஸ்ட்ரி பல் மருத்துவமனையில், ரூட் கெனால், இம்பிளான்ட் மற்றும் இன்விசலைன் சிகிச்சைகள் மிகச்சிறப்பாக வழங்கப்படுகின்றன. இதில், இன்விசலைன் என்பது 'கிளிப்' தெரியாமல், பல்வரிசையை சீரமைக்கும் உயர்தர சிகிச்சையாகும். இவ்வகை சிகிச்சையில் டாக்டர் கிஷோர்குமார் சிறந்து விளங்குகிறார்.சென்னை, பெங்களூரு, திருப்பூரை தொடர்ந்து, கோவை பீளமேட்டில், புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளார்கள் சங்க நிறுவனத் தலைவர் பாப்பீஸ் சக்திவேல் புதிய கிளையை திறந்து வைத்தார்.டாக்டர் கிஷோர் கூறுகையில், ''பல் மருத்துவம், மருத்துவ சிகிச்சை என்பதை தாண்டி, முக அழகு மற்றும் சீரமைப்பு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதற்கேற்ப, எங்கள் மருத்துவமனையில் அதிநவீன பல மருத்துவ தொழில்நுட்பங்களுடன் சிகிச்சை வழங்குகிறோம். விபரங்களுக்கு, 99046 40000 என்ற எண்ணில் அழைக்கலாம்,'' என்றார்.