உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் பயனாளர்கள் சங்கம்: தினமலர் நாளிதழுக்கு நன்றி

ரயில் பயனாளர்கள் சங்கம்: தினமலர் நாளிதழுக்கு நன்றி

கோவை;மேட்டுப்பாளையம் -- கோவை மெமு ரயிலை, போத்தனுார் வரை நீட்டிக்க வேண்டும் என, தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு ஆதரவு தெரிவித்த தினமலர் நாளிதழுக்கு, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை வரை இயக்கக்கூடிய மெமு ரயிலை, போத்தனுார் வரை நீட்டிக்க வேண்டும் என, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்து, போராடி வந்தனர்.தினமலர் நாளிதழ், இது குறித்த செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தது.இதன் பலனாக, தெற்கு ரயில்வே, மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலை, போத்தனுார் வரை நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது.போத்தனுார் பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்.இதில் தினமலர் நாளிதழின் பங்கு முக்கியமானது. போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில், தினமலர் நாளிதழுக்கு நன்றி.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை