உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி

மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி

பொள்ளாச்சி;''போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற கோவை கலெக்டர் கிராந்திகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த அரசுத்துறைகள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அதிகளவு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணித்து தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பள்ளிகளிலும் குழு அமைத்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழுவினரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் பாதுகாப்பதை அரசின் நோக்கமாகும். இதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை