உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்கும் வனத்துறை

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்கும் வனத்துறை

மேட்டுப்பாளையம்:கோடை காலம் நெருங்கும் முன்பே தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. நீரோடைகளில் தண்ணீர் வற்றியுள்ளன. இதையடுத்து வனப்பகுதிகளில் வன விலங்குகளின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், தடுப்பணைகள், குட்டைகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், மூங்கில், வேம்பு, புங்கன், கிளுவை, தேக்கு போன்ற வனத்திற்கு நன்மை தரக்கூடிய பல வகையான 20 ஆயிரம் மரக்கன்றுகள் கடந்த 7 மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான கண்டியூர், ஓடந்துறை காப்புக்காடுகளில் நடப்பட்டன.தற்போது வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், மரக்கன்றுகளை பாதுகாக்கும் விதமாக தினமும் வாகனங்கள் வாயிலாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடப்படுகின்றன. பசுமையான வனப்பகுதிக்கு மரங்கள் மிகவும் அவசியம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை