உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 4:30 மணிக்கு அலங்கார பூஜையும், 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. காலை 6:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற மொண்டி பாளையம் வெங்கடேச பெருமாள் கோயிலில் நாளை காலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜையும், காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. பொங்கலூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், வரதையம்பாளையம் பெருமாள் கோவில், குன்னத்தூர் புதூர் பெருமாள் கோவில், பொகலூர், குரும்பபாளையம் வாத பெருமாள் கோவில் என அன்னூர் மற்றும் கோவில்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதேசி விழா கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை