உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து

 டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து

கோவை: தமிழகத்தில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக, மீன் வரத்து குறைந்துள்ளது. அதே சமயம், கார்த்திகை காரணமாக மீன் நுகர்வும் குறைந்துள்ளதால், வியாபாரிகளுக்கு இதன் பாதிப்பு பெரியளவில் தெரியவில்லை. கோவை மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளாஆகிய பகுதிகளில்இருந்து மீன் வரத்து இருக்கும். வார நாட்களில், 20 முதல் 30 டன் வரத்தும், வார இறுதியில் 40 டன் வரத்தும் இருக்கும். மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சிரம் மீன் வழக்கமாக, 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகும். சில நேரங்களில், 1500 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படும். இரு நாட்களுக்கு முன், 650 முதல் 700 ரூபாய்க்கு விற்பனையானது. தவிர, பிற மீன்கள் அனைத்தும், சற்று விலை குறைந்து விற்பனையானது. கோவை மீன் மார்க்கெட் வியாபாரி சல்பிக் ரஹ்மான் கூறுகையில், ''கார்த்திகை மாதம் என்பதால், மீன் நுகர்வு வழக்கத்தை காட்டிலும் குறைவது இயல்பு. புயல், மழை காரணமாககோவை சந்தைக்கு வரத்து வழக்கத்தை காட்டிலும், 40-50 சதவீதம் குறைவாகவே உள்ளது. கேரளாவிலிருந்து வரத்து இருந்ததாலும், மீன் நுகர்வு குறைவு என்பதாலும், விலை சற்று குறைந்தே விற்பனையாகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை