உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலர்ந்தும் புலராத காலை வேளை இருட்டால் திருடர்கள் தொல்லை

புலர்ந்தும் புலராத காலை வேளை இருட்டால் திருடர்கள் தொல்லை

கோவை;இருட்டு நீங்காத, காலை 6:00 மணிக்கு தெருவிளக்குகள் அணைக்கப்படுவதால், நடைபயிற்சி மேற்கொள்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்கும் பணி, மாநகராட்சி ஒப்பந்ததாரர் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. தெருவிளக்குகள்மாலை 6:30 மணிக்கு எரியத்துவங்கி அதிகாலை 6:00 மணிக்கு அணைக்கப்படுகிறது.தற்போது பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், அதிகாலை 6:45 மணிக்கு பிறகே, பனி விலகி சூரியன் உதிக்கிறது. ஆனால், அதற்குள் தெரு விளக்குகள் அணைக்கப்படுவதால், முக்கால் மணி நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இச்சமயங்களில், நடைபயிற்சி மேற்கொள்வோர் சாலையோரங்களில் நடந்து செல்வர்.நாளிதழ், பால் வினியோகம் செய்வோர், நகர எல்லைக்குள் வரும் சரக்கு லாரிகள் அவசர கதியில் வேகமாக செல்லும். அப்போது நடந்து செல்பவர்கள் மீது, வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்கள், வீட்டின் முன் கோலமிடும் பெண்களிடம், செயின்பறிப்பு சம்பவங்களும் நடக்கின்றன.இதை தவிர்க்க, காலை 7:00 மணிக்கு பிறகே, தெரு விளக்குகளை அணைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி