உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை திட்டத்தின் ஆள் இறங்கும் குழி சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

பாதாள சாக்கடை திட்டத்தின் ஆள் இறங்கும் குழி சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

பொள்ளாச்சி:'தினமலர்' செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, இணைப்புச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சீரமைக்கும் பணி நடந்தது.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, கோட்டூர் ரோடு - தெப்பக்குளம் வீதி இணைப்புச்சாலையில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி சோமடைந்து இருந்தது.ஆள் இறங்கும் குழி பகுதி உள் இறங்கியுள்ளதுடன், அதன் மூடியில் உள்ள இரும்பு கம்பி பெயர்ந்து விபத்துக்கு வழிக்கும் வகையில் இருந்தது. இதனால், அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சேதமடைந்த ஆள் இறங்கும் குழியை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்