உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் நகை, பணம் பறித்த மூவருக்கு சிறை

பெண்ணிடம் நகை, பணம் பறித்த மூவருக்கு சிறை

கோவை; கோவை கவுண்டம்பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர், சுமதி, 46. கடந்த, 7ம் தேதி வீட்டில் இருந்த போது, காரில் வந்த மூவர், வீட்டினுள் நுழைந்து, சுமதி அணிந்திருந்த, இரண்டு பவுன் செயின் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர். தொடர்ந்து, அங்கிருந்த சுமதியின் உறவினரிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டை பறித்து, அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு தப்பினர். சுமதி கவுண்டம்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணையில், கோவைபுதுார் பிரிவை சேர்ந்த சதாம் உசேன், 35, கோவை பி.என்.புதுார், ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்த ஸ்ரீ பிரதான், 28, கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராகுல், 22 ஆகிய மூவரும் நகை, பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு பவுன் செயின், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சதாம் உசேன் மீது ஆறு, ஸ்ரீ பிரதான் மீது, ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராகுல் மீது ஒரு திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ