| ADDED : பிப் 12, 2024 11:15 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. இதில், புனித தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதற்கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மருந்து சாற்றுதல், பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பம் போன்றவைகள் நடந்தது.நேற்று, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்படுதல், விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு, அருளாளர்கள் அருளுரை, பதின் மங்கள காட்சி, பெருந்திருமஞ்சனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.