நெகமம்;நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில், நேற்று திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.நெகமம், கப்பளாங்கரையில் உள்ள பரமசிவன் கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்ச்சி, 12ம் தேதி துவங்கியது. இதில், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடுகள் நடந்தது.தொடர்ந்து, 13ம் தேதி, சுவாமிக்கு சிறப்பு வேள்வி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், முதற்கால வேள்வி மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்குதல் நடந்தது.கடந்த, 14ம் தேதி, காலை, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, திருக்குறிப்புத் திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, விமான கலசங்கள் நிறுவுதல், எண் வகை மருந்து சாற்றுதல் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்குதல் மற்றும் மூன்றாம் கால வேள்வி நடந்தது.நேற்று, 15ம் தேதி, விமான கலசங்களுக்கும், சுவாமிகளுக்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (16ம் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது.