உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னியம்பாளையத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி

சின்னியம்பாளையத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி

கோவை : சின்னியம்பாளையம் தியாகிகள் நான்கு பேருக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., சார்பில், சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இ.கம்யூ., மாநில துணை செயலாளர் பெரியசாமி பேசுகைகயில், ''சின்னியம்பாளையம் தியாகிகள், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என, போராடியவர்கள். நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்தவர்கள். நல்ல தேசபக்தர்களாகவும், மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு, தமிழக அரசு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்,'' என்றார். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், இ.கம்யூ., சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் வக்கீல் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ