மேலும் செய்திகள்
மதுக்கரை தாலுகாவில் 994 பேருக்கு பட்டா
1 minute ago
24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
1 minutes ago
மேட்டுப்பாளையம்: -: நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் கல்லாறு இ--பாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இ--பாஸ் சோதனைச் சாவடி ஊழியர்கள் கூறுகையில், 'கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூட, இ--பாஸ் பதிவு செய்து வருகின்றன. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பலவும் இ--பாஸ் இன்றி வருகின்றன. அவர்களிடம் கேட்டால், நாங்கள் லோக்கல்; ஏன் இ--பாஸ் எடுக்க வேண்டும் என கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கு இ--பாஸ் பதிவு செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சோதனைச்சாவடியில் 'பூம் பேரியர்' அமைக்கப்பட்டு, வாகனங்கள் தானியங்கி முறையில் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது' என்றனர்.
1 minute ago
1 minutes ago