உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமி பாலியல் பலாத்காரம்; டியூஷன் ஆசிரியருக்கு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்; டியூஷன் ஆசிரியருக்கு சிறை

கோவை; கோவையை சேர்ந்த, 11 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே 35 வயது ஆசிரியை உள்ளார். அவரது கணவரும் ஆசிரியர். இருவரும் பல குழந்தைகளுக்கு, டியூஷன் எடுத்து வந்தனர். சிறுமியும், ஆசிரியையிடம் டியூஷன் சென்று வந்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த, ஆசிரியையின் கணவர், ஒரு கட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார். ஆசிரியையிடம் சிறுமி தெரிவித்தார். அதற்கு ஆசிரியை, இதை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என, சிறுமியை மிரட்டியுள்ளார். மன உளைச்சலில் இருந்த சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் தெற்கு மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.அவரது மனைவிமீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை