உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராவல் ஏற்றி வந்த இரு லாரிகள் பறிமுதல்

கிராவல் ஏற்றி வந்த இரு லாரிகள் பறிமுதல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் உரிய ஆவணம் இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த இரு லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோடு வழியாக டிப்பர் லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி செல்வதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, சொக்கனூர் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில், சொக்கனூர் பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட லாரியில், உரிய ஆவணங்கள் இன்றி, 3 யூனிட் கிராவல் மண் எடுத்து வந்தது உறுதியானது. இதே போன்று சிங்கராம்பாளையம் அருகிலும் கேரள மாநில பதிவு எண் கொண்ட லாரியில், உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் எடுத்து வரப்பட்டது.இந்த இரண்டு லாரி டிரைவர்களும் தப்பி ஓடியதால், லாரிகளை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை