உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருசக்கர வாகனம் திருடியவர் கைது

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டில் வசிப்பவர் ரவிக்குமார், 41; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர், சொக்கலிங்கேஸ்வரர் கோவில் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கோவை சென்று, திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., பிரிவு அருகே ரவிக்குமாரின் இருசக்கர வாகனத்தை, நபர் ஒருவர் ஓட்டி செல்வது தெரிந்தது. அந்நபரை ரவிக்குமார் பிடித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் பெயர் அப்சல் ஹுசைன், 33, கவுண்டம்பாளையம், அசோக் நகர் கீழ் பகுதியில் வசிப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ