உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் டெர்மினல் 2 பணி இம்மாதம் முடிக்க உத்தரவு

உக்கடம் டெர்மினல் 2 பணி இம்மாதம் முடிக்க உத்தரவு

கோவை: உக்கடம் டெர்மினல் -2, செம்மொழி பூங்காவில் கன்வென்ஷன் சென்டர் கட்டுமான பணியை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா நேற்று ஆய்வு செய்தார். ரூ.8 கோடியில் உக்கடம் டெர்மினல் 2 வேலை நடக்கிறது. அக்., வேலை முடியும் என கூறப்பட்டது. கான்கிரீட் தளம் அமைத்தல், கட்டுமான பொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் தாமதமாகிறது. செம்மொழி பூங்கா திறந்து ஓராண்டு ஆகிவிட்டது. ரூ.25 கோடியில், 1,000 பேர் அமர கூடிய கன்வென்ஷன் சென்டர் பணி இன்னும் முடியவில்லை. இதுவும் தாமதமாகி வருகிறது. உக்கடம் டெர்மினல்- 2, செம்மொழி பூங்காவில் கன்வென்ஷன் சென்டர் கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க ரவி தேஜா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி