உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம் : டைடல் பார்க்கில் துவக்கம்

நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம் : டைடல் பார்க்கில் துவக்கம்

கோவை:நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டத்தில், டைடல் பார்க் பகுதியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ்நாடு பசுமை இயக்கம், எல்காட் சார்பில் முதல்கட்டமாக கோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக நேற்று முன் தினம், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கோவை கலெக்டர் கிராந்திக்குமார் தலைமை வகித்தார். எல்காட் நிர்வாக அதிகாரி தனலட்சுமி கவுரவ விருந்தினராக பங்கேற்றார். கம்யூனிட்ரீ நிறுவனம், தென்மாநிலங்கள் அளவில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகளின், பராமரிப்பை இந்நிறுவனம் மேற்கொள்ளும். மரக்கன்றுகள் நடுவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்ராக்ட் கிளப், லேடீஸ் சர்க்கிள் ஆப் இண்டியா, ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி