உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரலட்சுமி விரதம்; பெண்கள் பாராயணம்

வரலட்சுமி விரதம்; பெண்கள் பாராயணம்

கோவை; பதினாறு வகை செல்வத்தையும் வழங்கும், லட்சுமிதேவியை நினைத்து விரதமிருந்து, வழிபாடுகளை மேற்கொள்வதே வரலட்சுமி விரதம். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம், நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெண்கள் வீட்டை சுத்தம் செய்து, மலர்களால் பூஜை அறையை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்தனர். கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க, நோன்புக்கயிறு கட்டி வணங்கினர். பூஜையின் போது, புனிதநீர் நிரம்பிய பூர்ண கும்பத்தை எழுந்தருளச்செய்து, மகாலட்சுமி, அஷ்டலட்சுமி , கனகதாரா ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தனர். வரலட்சுமி விரத பூஜைக்காக, வீட்டிற்கு வருகை தந்த பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம், நெய்வேத்தியமாக கொழுக்கட்டையையும் வழங்கி, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை