| ADDED : நவ 21, 2025 06:48 AM
அ விநாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், நவம்பர் 1ம் தேதி, வெரிக்கோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் துவங்கியது. இம்முகாம், வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: அசுத்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் பல்வேறு காரணங்களால், சீரானதாக இருப்பதில்லை. இதனால், பலருக்கு கால்களில் ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. நாளைடைவில் இது சுருண்டு, வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் நடக்கும்போதும், நிற்கும்போதும் வலி அதிகமாகி அவதிப்படுவர். இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான முகாம் அவிநாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வெயின் கிளினிக்கில், நவ., 1ம் தேதி துவங்கியது; நவ., 29ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதியை அதிநவீன கருவிகள் வாயிலாக ஸ்கேன் செய்து, ரத்த நாள வீக்கத்துக்கான காரணத்தை கண்டறிய அனைத்து நவீன கருவிகள் மற்றும் வசதிகள் மருத்துவமனையில் உள்ளன. முகாமில் பங்கேற்று இப்பாதிப்பை கண்டறியும் ஸ்கேன் செய்ய, கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. இந்நோய்க்கு ரேடியோ பிரீவென்சி முறையில் எளிதாக ஒரே நாளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்ப முடியும். முன்பதிவுக்கு, 87548 -87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.