உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகராட்சி பெண்கள் பள்ளியில் வர்ணம் விழா கொண்டாட்டம்

 மாநகராட்சி பெண்கள் பள்ளியில் வர்ணம் விழா கொண்டாட்டம்

ஆர்.எஸ்.புரம்: 'ஒவ்வொரு கனவும் ஒரு வர்ணம்' என்ற கருப்பொருளுடன், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், முதலமைச்சர் திறனாய்வு தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கலைத் திருவிழா போன்றவற்றில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள் பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் மற்றும் நூறு சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தலைமையாசிரியை ஸ்ரீகலா கூறுகையில், “தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா மற்றும் இதர போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், மாணவர் இடைநிற்றல் குறையும்; படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை