உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம்ம ஹார்ட்டுக்கு ரொம்பவே நல்லதாம்!

நம்ம ஹார்ட்டுக்கு ரொம்பவே நல்லதாம்!

செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. சிலர் காவலுக்காகவும், சிலர் பாசத்துக்காகவும் வளர்க்கின்றனர். இருந்தாலும், வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பலன்களையும் நன்மைகளையும் அளிக்கிறது.செல்லப்பிராணியுடன் உரையாடுவது, விளையாடுவது போன்றவை, மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்துகிறது.நடைபயிற்சியின் போதும் கூட, அவை போகும் போக்கில் நாம் செல்வதால், சுறுசுறுப்பாக இருப்பதை உணர முடியும்.தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத்தொடங்கி விட்டால், உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்கலாம். அதன் நிலையான அன்பும், துறு துறு விளையாட்டும் தனிமையை முற்றிலுமாக போக்க பெரிதளவில் உதவும்.செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள், ரிலாக்ஸ்சேஷனை அதிகரிப்பதால், அவை ரத்த அழுத்ததை குறைத்து, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை