உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி

50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி

கோவை: நீண்ட காலம் இலவச மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகளில், 50 ஆயிரம் பேருக்கு, நடப்பாண்டில் இணைப்பு வழங்கப்படும் என, அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. சாதாரண பிரிவு, சுய நிதி பிரிவு என்ற இரு பிரிவுகளில், விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு அரசால் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்வழித்தட செலவு, மின் வினியோகம் அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். சுயநிதி பிரிவில், தட்கல் எனப்படும் விரைவு முறையில் விண்ணப்பிக்கும் விவசாயிகள், வழித்தட முழு செலவினத்தையும் ஏற்க வேண்டும். மாநிலம் முழுவதும், 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். கோவையில், 2007, 2009ம் ஆண்டுகளில் சாதாரண பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருக்கின்றனர். தட்கல் முறையில் முழு பணம் செலுத்திய விவசாயிகளும் காத்திருக்கின்றனர். 50 ஆயிரம் பேருக்கு நடப்பாண்டில் மின் இணைப்பு வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் முதல்வர் அறிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி. அவர் கூறியதாவது: மின் இணைப்புக்கு முழுமையாக பணம் செலுத்தியும், மின் இணைப்பு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் பலர் காத்திருக்கின்றனர். 2007-2008 முதல் சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதே போன்று, 2013ல் சுய நிதி பிரிவில் பதிவு செய்தவர்களும் காத்திருக்கின்றனர். 2024-25 ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி முறையில் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். விவசாய குறைத்தீர் கூட்டத்தில் கேட்டாலும் சரியான பதில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார். கோவை மண்டல மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'விவசாயிகளுக்கான மின் இணைப்பு சார்ந்த பிரச்னையில், இங்கு முடிவு எடுக்க இயலாது. இது மாநில அளவிலான பிரச்னை' என்றார். சரி, முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்களின் பார்வைக்கு, பிரச்னையை கொண்டு செல்லலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jaiprakash
நவ 12, 2025 13:49

ஏற்கனவே மின்சார வாரியம் 17600000 கோடி நஷ்டத்துல நடந்துட்டு இருக்கு. சூரிய மின்சாரத்திற்கு விவசாயிகள் மாறுவதற்கு அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.


kannan p
நவ 09, 2025 10:32

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவை சார்ந்த நான், இலவச மின்சாரம் 2007-2008 ல் பதிவு செய்த எனக்கு 2023ம் வருடம் அனுமதி கிடைத்தது. ஆனால் சுமார் 5-6 கம்பங்கள் அமைந்து கிணற்றுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தயார் செய்த நிலையில் மீட்டர் பொருத்துவதை நிறுத்தி வைத்துள்ளது மன வேதனையை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனு செய்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காது மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது..இதுபோன்ற காலம் தாழ்ந்த அரசின் அலட்சியம் விவசாயத்தை எப்படி ஊக்குவிற்கும் .விவசாயம் நமது நாட்டின் கண்கள் என்று சொல்லும் பல அரசியல் சார்ந்தோர் சொல்வது வேதனை அளிக்கிறது..இது போன்ற பல இன்னல்களை சந்திக்கும் நமது விவசாயிகளின் நிலை எண்ணிலடங்காதவை...... என்று தீரும் நமது விவசாயிகளின் அவல நிலை...


தமிழன்
நவ 10, 2025 06:29

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காத்திருந்தும் உங்களால் மின் இணைப்பு பெற முடியவில்லை அதிமுக ஆட்சியிலும் இதே போல் தான் நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி வந்ததும் வெற்று விளம்பரமாக வருடம் 5000 மின் இணைப்பு வழங்குவதாக சொல்கிறார்கள் ஆனால் 2022 ஆம் ஆண்டு அறிவித்த ஒரு லட்சம் மின் இணைப்புகளை கூட இன்று வரை வழங்கி முடிக்கவில்லை வெறும் பொய் கணக்கு எழுதி விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்


மணிமுருகன்
நவ 08, 2025 23:16

இந்தப் பதிவில் விவசாயிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் யார் ஏனென்றால் விவசாயிகள் பேரில் பண்ணையார்கள் அரசியல்வாதிகள் தான் இலவசமின்சாரம் பெறுகின்றனர் அதுவும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஓட்டை ஊழல்கட்சி திமுக கூட்டணிமொத்த குடும்பம் மசெ நி மாவட்டம் வட்டம் முதற்கொண்டு எல்லாம் இலவசம் தான் இதை வரலாறு சொல்கிறது


Gajageswari
நவ 08, 2025 12:03

50ஆயிரம் கட்ட முடியும் என்றால் அவர் போலி விவசாயி


தமிழன்
நவ 10, 2025 06:31

திராவிடம் மாடல் ஆட்சியில் விவசாயிகளிடம் வெறும் அம்பதாயிரம் கூட இருக்கக் கூடாதா. விவசாயிகள் பிச்சைக்காரனாக இருக்க வேண்டுமா


சமீபத்திய செய்தி