உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொப்பம்பட்டி ரோட்டில் தண்ணீர் கசிவு சீரமைப்பு

தொப்பம்பட்டி ரோட்டில் தண்ணீர் கசிவு சீரமைப்பு

நெகமம்: பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, தொப்பம்பட்டி அருகே ரோட்டின் ஓரத்தில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு 'தினமலர்' செய்தி எதிரொலியாக சரிசெய்யப்பட்டது.பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில், தொப்பம்பட்டி பகுதியில் ரோட்டின் ஓரத்தில் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வழிந்தோடிய நிலையில் இருந்தது.இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். மேலும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ரோட்டில் குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது. இச்செய்தி எதிரொலியாக,தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை