உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாய் உடைந்து வீணான குடிநீர்

குழாய் உடைந்து வீணான குடிநீர்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே குழாய் உடைந்து, நீரூற்று போன்று பீறிட்டு குடிநீர் வீணானது.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையத்தில் இருந்து கிராமப்புறங்கள், பேரூராட்சிகள், குறிச்சி - குனியமுத்துார் திட்டம் என பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், ஜமீன் ஊத்துக்குளி அருகே, கிருஷ்ணா குளம் வழியாக குறிச்சி - குனியமுத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்நிலையில், நேற்று மாலை அந்த ரோட்டில் குழாய் உடைந்து ஊற்று போல மேல் நோக்கி நீர் சென்று வீணானது.இது குறித்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், குடிநீர் குழாய் எந்த திட்டத்துக்கானது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை